இங்கிலாந்தை இம்சித்த அக்ஸர் பட்டேல் : அறிமுக தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸர் பட்டேல். இடது கை சுழற்பந்து வீச்சாளர், இடது கை பேட்டிங் ஆல் ரவுண்டரான அக்ஸர் பட்டேல் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

ஆறு இன்னிங்ஸில் மொத்தமாக நான்கு முறை 5 விக்கெட்டுகளுக்கு கூடுதலாக வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கையில் அஜந்தா மெண்டிஸ் 26 விக்கெட்டுகளை தனது அறிமுக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது சாதனையாக இருந்தது. 

இங்கிலாந்து அணி அக்ஸர் பட்டேலின் சுழலில் இந்த தொடரில் வீழ்ந்தது என்றும் சொல்லலாம். பல முன்னணி வீரர்களை எளிதில் வீழ்த்தி இந்தத் தொடரில் அசத்தினார். அனுபவ வீரர் அஸ்வின் இந்தத் தொடரில் கலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்ஸரின் இந்த விக்கெட் மழை இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொடரை வென்றதற்கான கோப்பையை வாங்கிய விராட் கோலி, பின்னர் அதனை அக்ஸர் கைகளில் கொடுத்து அழகு பார்த்தார். ஏற்கெனவே ஆஸ்திரேலிய தொடரில் தமிழக வீரர் நடராஜன் கைகளில் கோப்பையை கொடுத்து ரகானே அழகு பார்த்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே