கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2020 தொடரின் 49 ஆவது போட்டி சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 61 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.

173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 14 ரன்னில் வருன் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதேநேரம் மற்றொரு தொடக்க ஆட்டாக்காரரான ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடரில் தன்னுடைய 2 ஆவது அரை சதத்தை அடித்தார். 

கடைசியில் 72 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதேபோல் அம்பதி ராயுடு 38 ரன்னிலும், தோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற போது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் ஜடேஜா.

சாம் குர்ரான் 13 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே