திமுகவை போன்று ஓடி ஒளியும் கட்சியல்ல அதிமுக : அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவைப் போன்று அதிமுக ஓடி ஒளியும் கட்சியல்ல என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐய்யரின் 166-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்கள் அனுமதிக்கப்படும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சிக்காக திமுக ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டதாகவும்; ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு எட்டரை கோடி ரூபாய் பெறப்படுவதாகவும் கூறினார்.

தமிழ் வளர்சிக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற முதலமைச்சர் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே