விஜயதசமியையொட்டி அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான சேர்க்கை

விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வசதியாக, அரசு தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை இன்று திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியையொட்டி, 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் தொடக்க வகுப்புகளில் சேர்க்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளில் கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை இன்று, அருகாமையில் உள்ள கே.ஜி. வகுப்புகளிலும் 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே