நடிகை விஜயலக்ஷ்மி மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை விஜயலக்ஷ்மி நேற்று முன்தினம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.
அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலக்ஷ்மி, தனது கடைசி வீடியோ என ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.
மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் விஜயலக்ஷ்மியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விஜயலக்ஷ்மி வீடியோ
நேற்று மருத்துவமனையில் விஜயலக்ஷ்மி சிகிக்சை பெறும் போட்டோ வெளியானது.
இந்நிலையில் இன்று நடிகை விஜயலக்ஷ்மி மருத்துவமனையில் இருந்தப்படியே தனது உடல்நிலை குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மூக்கில் டியூப் பொறுத்தப்பட்டுள்ள நிலையில் பேசியிருக்கிறார் விஜயலக்ஷ்மி. அதில், எல்லோரும் சேர்ந்து என்னை காப்பாற்றி விட்டார்கள். நான் இப்போது ஓகே. உங்களின் அன்பு ஏதோ ஒரு ரூபத்தில் என்னை காப்பாற்றிவிட்டது.

நான் நேற்றெல்லாம் வாழ விருப்பமில்லாமல் ரொம்ப சீரியஸாக இருந்தேன். இன்று காலை பல நண்பர்கள் என்னுடன் போனில் பேசினார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன். என்னுடைய தற்கொலை முயற்சியை கூட அரசியலாக்குகிறார்கள்.

இப்படி இருந்தால், இந்தியர்களை ஒரு ரூபாய்க்கு கூட யாரும் மதிக்க மாட்டார்கள். மனிதர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இதில் டிராமா எதுவும் இல்லை. நேற்று மதியத்தில் இருந்து எனக்கு எந்த உணவும் கொடுக்கப்படவில்லை.

நான் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பிபி மற்றும் இதயத்துடிப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
நான் போராடிக் கொண்ருக்கிறேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். நான் ரொம்பவே வெக்ஸாகி விட்டேன்.
நான் உங்களுக்காகதான் வாழ்கிறேன். இதை யாரும் அரசியலாக்காதீர்கள். யாருடைய வாழ்க்கையிலும் விளையாடாதீர்கள்.
யாரும் இதுபோன்ற ஆபத்துக்களை எடுத்து இறக்க முயற்சி செய்ய மாட்டார்கள். நான் குறிப்பாக அத்தகைய மலிவான நபர் அல்ல, என்று தெரிவித்துள்ளார்.
