போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..!!

போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் மும்பையில் என்சிபி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்த புகாரில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது தோழிகளான நடிகை ரகுல் ப்ரீத் சிங், சரா அலி கான் உள்ளிட்டோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதனை ஏற்று ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அவரிடம் நடிகை ரியாவுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரியாவுடன் சென்ற இடங்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மையா? உண்மை என்றால் போதைப் பொருள் எங்கு இருந்து கிடைத்தது என்பன உள்ளிட்டவை குறித்து ரகுல் ப்ரீத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே நடிகைகள் தீபிகா, சாரா அலி கான் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே