இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்!

இசை ஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலரின் இளைய மகனும் , இயக்குனருமான ஹோமோ ஜோ உடல்நிலை காரணமாக உயிர் இழந்தார்.

கிழக்கு வாசல் , சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராகவும், கற்க கசடற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு இருந்தார்.

மென்மையான குரல் , எளிய குணத்தினர் , என்று திரையுலகில் பலராலும் போற்றப்பட்டவர்.

இவரது இறப்புக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே