மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்த நிலையில், தற்பொழுது அவர் ஆளுநரை சந்தித்து பேசிவருகிறார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானது.

இதனால் சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சிவசேனா கட்சி ஆளும் மஹாராஷ்ரா மாநிலம், கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

அந்தவகையில், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், இடிக்கப்பட்டது. 

அவரின் கட்டங்களை இடிக்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள காரணத்தினால், இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் வீட்டை இடித்ததற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அதிருப்தி தெரிவித்ததுடன், முதல்வர் உத்தவ் தாக்ரேவின் முதன்மை ஆலோசகரைத் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தார்.

இதன்காரணமாக கங்கனா ரனாவத், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி அவர், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்து பேசிவருகிறார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே