பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ராம் லீலா” திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் உருவானதையடுத்து, இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த தீபிகா படுகோன் மற்றும் ரன் வீர் சிங் அதன் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள “83” திரைப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீரும், அவரது மனைவியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர்.