இஷ்க்’ தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘இஷ்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அனு ஷீத்தல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘இஷ்க்’. 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம் கேரளாவில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டன.

தமிழில் இந்தப் படத்தின் ரீமேக்கில் கதிர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜீரோ’ படத்தை இயக்கிய ஷிவ் மோகா இதனை இயக்குவார் எனத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்நிலையில், ‘இஷ்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. தேஜா சஜா நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக  பிரியா வாரியர் நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. எஸ்.எஸ்.ராஜு இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சாம் கே.நாயுடுவும், இசையமைப்பாளராக மகதி ஸ்வரா சாகரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

தெலுங்கிலும் ‘இஷ்க்’ என்ற பெயரிலேயே தயாராகி வருகிறது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே