போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அவர், தற்கொலை செய்துகொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் விசாரணையின் போது, நடிகை ரியா சக்கரபோர்த்தியும் இதனை ஒப்பு கொண்டதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள நடிகை ரியா, ஜாமீன் கேட்டு மும்பையில் இருக்கும் செசன்ஸ் கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

ரியா தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகை ரியா தெரிவித்து இருந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே