ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு..!!

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று இரண்டு நாட்களுக்கு முன், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் முன்னோட்டமாக நடிகர் விஜயின் புகைப்படத்துடன், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெற்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் “1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை கண்ட தமிழகத்தில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும்…. இளம் தலைவரே! நாளைய தமிழக முதல்வரே! 2021 உங்கள் தலைமையில் அமையட்டும்…. தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்… ” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை, மதுரை, உள்ளிட்ட நகரங்களில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்ட, விஜய் மக்கள் மன்றத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினியை போல் அல்லாமல் விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டுகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரபரப்பட்ட நிலையில், நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வரும் சட்டமன்ற தேர்தலில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பாஜக நடிகர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் முனைப்பில் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் இந்த தேர்தலில் களம் இறங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே