அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது : அமைச்சர் செல்லூர் ராஜூ

சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக மக்களை மத ரீதியில் பிரித்து, திமுக உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்கட்டினார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் பழனிசாமி திகழ்வதாக புகழாரம் சூட்டிய செல்லூர் ராஜூ,

மக்களுக்காகத் தான் மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக யார் கையிலும் இல்லை என்றும்; மக்கள் கையில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே