நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்..!!

இந்தி நடிகர் சோனு சூட் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்த்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மும்பையிலும் லக்னோவிலும் சோனு சூட்டின் வீடு, அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் புதன் முதல் வெள்ளி வரை மூன்று நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சொத்து விற்பனை தொடர்பாக வரி ஏய்த்த புகாரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக முதலில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரைப்படத் துறையில் இருந்து பெற்ற ஊதியம், போலியான நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்றது ஆகிய வகைகளில் அவர் 20 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்த்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே