நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் தர்ணா..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்மீக அரசியலை தொடங்குவேன் என்று தெரிவித்ததால் அதனை நம்பி அவரது ரசிகர்கள் கடந்த 3 ஆண்டுகளாக களத்தில் இறங்கி பணி செய்தனர்.

தற்போது திடீரென அவர் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேதிர்ச்சியாக உள்ளது

ரஜினியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத ரஜினி ரசிகர்கள் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் அறிவிப்பால் தாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தர்ணா போராட்டத்தில் ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள போவதில்லை என்றும்; ரஜினியின் உடல்நிலை முக்கியம் என்றும்; அவரது ரசிகர்கள் என்ற பெயரில் அவருக்கு எதிரானவர்கள் செய்யும் நாடகம் என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே