குஜராத் மாநிலம் அகமதாபாத் மொதேராவில் உள்ள சர்தார் படேல் மைதானம் திடீரென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்காக உலகிலேயே பிரம்மாண்டமான பெரிய மைதானம் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாப்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்கு சர்தார் படேல் மொட்டேரா மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். 

இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானமே உலகின் பெரிய மைதானமாக இருந்த நிலையில் அதை மொட்டேரா மைதானம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில், அகமதாபாத் மொதேரா கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே