நடிகரும், இயக்குநருமான விசு சென்னையில் காலமானார்!

பிரபல நடிகரும் , இயக்குனருமான விசு (வயது 74) வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் சென்னையில் காலமானார்.

மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட விசு, 1945 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார்.

கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கிய விசு, பட்டின பிரவேசம் என்ற படத்தில் கதாசிரியராக வேலை செய்தார்.

கண்மணி பூங்கா என்ற படத்தை முதல்முதலாக அவர் இயக்கினார்.

ரஜினியின் தில்லு முல்லு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார். சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார் விசு. 

வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் ஓய்வு எடுத்து வந்த விசு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே