டெல்லியில் மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது!

டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக ராஜேந்தர் சிங் என்ற மருத்துவர் குறிப்பு எழுதி வைத்து தற்கொலை செய்த கொண்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அந்த ஆளும் கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்

டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற மருத்துவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் எழுதி வைத்த குறிப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் என்பவர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும்; இதனால் அவருடைய தொல்லை தாங்காமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வந்தனர். 

இந்த நிலையில் பிரகாஷ் ஜார்வால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் அவருடைய உதவியாளரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

டெல்லி மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே