பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது..!! சிக்கியது எப்படி??

கோயில் ஒன்றின் பின்புறத்தில் இரண்டு சுவர்களுக்கு நடுவே சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்த பள்ளி மாணவி ஒருவர் பதற்றத்தடன் நின்றுகொண்டிருக்க, ரோஸ் நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர்,

மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட தாலிக் கயிற்றை அந்த பள்ளி மாணவியின் கழுத்தில் கட்டுகிறார்.

பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய இளைஞர்
பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய இளைஞர்

பதற்றத்துடனேயே அந்த மாணவியும் மஞ்சள் கயிற்றை மறைக்கிறார். அருகில் உள்ள இளைஞர்கள் சிரித்தபடியே இதை வீடியோ எடுக்கின்றனர்.

இந்த காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வளைத்தலங்களில் பரவி பலரையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

இந்த அதிர்ச்சி வீடியோவைக் கண்ட நீலகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்துள்ளது என்பதை உறுதி செய்தனர்.

பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய இளைஞர்
பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய இளைஞர்

இந்த வீடியோ குறித்து குன்னூர் மகளிர் காவலர்களிடம் பேசினோம்,“அந்த இளைஞரின் பெயர் கிறிஸ்டோபர். இவர் குன்னூர் அருகில் உள்ள சட்டன் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக செயல்பாட்டாளர் ஜனார்த்தனன்,“பள்ளி மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டி அதை வீடியோவாகவும் வெளியிட்டு இருப்பது மோசமான செயல்.

குறிப்பிட்ட அந்த நபருக்கு உரிய தண்டனை அளித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் முறையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே