தஞ்சை பெரிய கோவிலில் பர்மாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை தொடங்கியது.

இக்கோவிலில் பிப்ரவரி 5-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று காலை 9.30 மணிக்கு யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கியது. யாக சாலை பூஜைகள் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி அதிகாலை வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதற்காக பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் யாகசாலை பூஜைகளுக்கான 178 அடி நீளத்துக்கும், 108 அடி அகலத்துக்கும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே