சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21-க்கு விற்பனை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதலாக, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலை 3 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.21 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

டீசல் நேற்றைய விலையிலிருந்து 22 பைசா விலை குறைந்து, 76.99 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே