கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் வெளிவராத நிலையில், உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் உயிரிழப்பு 9,61,400 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,09,83,958 ஆகவும், அதேநேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 9,61,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 74,39,220 பேர் கரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2,25,83,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,386 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 69,67,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,03,824 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியா 53,98,230 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 86,774 அக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் 45,28,347 பேரும், ரஷியாவில் 10,97,251 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே