முன்கூட்டியே மழைக்காலத் தொடரை முடிக்க மத்திய அரசு முடிவு..!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், விடுமுறையின்றி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறித்து பல்வேறு எம்.பி.க்கள் அச்சம் தெரிவித்திருந்த நிலையில், அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள், நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்குமாறு வலியுறுத்தினர்.

இதனால் கூட்டத் தொடர் வரும் வாரத்தின் இடையேயே முடித்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. எனினும் இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எடுக்கும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பதி மக்களவை எம்.பி. துர்காபிரசாத்தும், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்தியும் கொரோனாவால் இறந்தனர்.

முன்னதாக கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரும் கொரோனாவால் உயிரிழந்திருந்து குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே