தஞ்சை : சென்னை சுபஸ்ரீ போல் மீண்டும் ஒரு பேனர் விபத்து..!!

ஒருவரின் மரணத்திற்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது தஞ்சை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேட்டுப்பட்டியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனர் சரிந்து விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜயராணி, என்பவர் இதை கவனிக்கவில்லை.

திடீரென்று சரிந்த பேனர் விஜயராணி மேல் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயராணி உயிரிழந்தார்.

ஒருவருக்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர், இன்னொருவரின் உயிரை பறித்த சம்பவம் தஞ்சை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பேனர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அப்படி இருந்து பேனர் சரிந்து விழுந்து இன்னொரு பெண் பலியாகி இருப்பது அதிர்ச்சியை தருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே