சீரம் நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லாவுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு..!!

சீரம் நிறுவன சி ஈ ஓ பூனாவாலாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசியும் ஒன்று.

அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலாவுக்கு இப்போது பாதுகாப்பை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ‘2 கமாண்டோக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு’ அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே