ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ளதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ளதை கண்டித்து கருப்பு தினமாக அனுசரித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் ஆலைத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், எதிர்ப்பு வாசகங்களுடன் கோலமிட்டும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே