உணவு, உடையின்றி தவித்து வந்த ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுமி!

இந்தியாவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து 6 வயதிலேயே பெரிய மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார் துர்வா மோடி என்ற சிறுமி.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜஹாதேஷ்வர் சன்ஸ்கார் பாரதி பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவி துர்வா மோடி, இந்த சிறுமி தன் வயதில் உள்ள குழந்தைகள் உண்ண உணவு, உடையின்றி தவித்து வருவதை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.

இதனால் மனம் வருந்திய அந்த சிறுமி, தனது குடியிருப்பு பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளிடமிருந்து உடைகள் மற்றும் காலணிகளை சேகரித்து அதனை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.

இது அவர்களின் பெற்றோர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது.

ஒருமுறை தனது பகுதியில் உடை சேகரிப்பில் அந்த சிறுமி ஈடுபட்டிருந்த போது அவளின் பெற்றோர்கள், தன் மகளிடம் உள்ள நற்குணத்தை கண்டு திகைத்தனர்.

இதனை அடுத்து தனது மகளுடன் ஒன்றிணைந்த பெற்றோர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அவர்கள் முடிந்தவரை அதிகமான உடைகள், காலணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வீதியில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டு வந்து வழங்கியுள்ளனர்.

இது குறித்து சிறுமி துர்வா மோடியின் தந்தை தெரிவித்துள்ளது, நான் ஒரு அதிர்ஷ்டசாலியான தந்தை என நினைக்கிறேன்.

சில நேரம் எனது மகளிடம் இருந்து வெளிப்படும் நற்குணங்கள் என்னை வாயடைக்கச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறுமியின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே