புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் பாஜகவின் தலைவர்களில் ஒருவராகிய ராம் ஜெத்மலானி இன்று டெல்லியில் காலமானார் அவருக்கு வயது 95.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக ராம் ஜெத்மலானி இருந்தது குறிப்பிடத்தக்கது மேலும் பலமுறை நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்திய பார் கவுன்சிலில் மிக நீண்ட நாட்களாக தலைவர் பொறுப்பை வகித்தவர் பல முக்கிய வழக்குகளில் இவரின் வாதத் திறமை அந்த வழக்கின் தன்மையே மாற்றியது குறிப்பிடத்தக்கது, இந்தியாவில் சட்டம் பயிலும் பல சட்டக் கல்லூரி மாணவர்கள் இவரை பின்பற்றுவார்கள் என்பதும் இவரின் அடையாளங்களில் ஒன்று .

பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய அத்வானியின் ஹவாலா வழக்கு, 2ஜி வழக்கு, ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, லல்லு பிரசாத் யாதவ் வழக்கு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு, மற்றும் நாடு முழுவதும் அறியப்பட்ட பல பிரபல நீதிமன்ற வழக்குகளில் இவரின் பங்களிப்பு அதிகம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது .
கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், கடந்த சில வருடங்களாக பொது வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராம் ஜெத்மலானி இன்று காலமானார் அவரின் இழப்பு இந்திய சட்டத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்று பல முன்னாள் நீதிபதிகள் தெரிவித்துருக்கிறார்கள் , ராம்ஜெத்மலானி குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே