டெல்லியில் கடும் காற்று மாசுவினால் விமான போக்குவரத்தில் தாமதம்

வரலாறு காணத அளவில் தலைநகர் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் காற்றுமாசு அட்டவணை தரக்குறியீட்டில்  407 புள்ளிகளில் இருந்து 625 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நகரம் முழுவதும் அடர் புகை சூழ்ந்துள்ளதால் கண் எரிச்சலாலும் , மூச்சுவிடுவதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இதேபோல் மேற்கு டெல்லியின் திர்பூர் பகுதியில் 509 புள்ளிகளும், டெல்லி பல்கலைக்கழக பகுதிகளில் 591 புள்ளிகளும், சாந்தினி சவுக் பகுதியில் 432புள்ளிகளும், லோதி சாலையில் 537 புள்ளிகளும் காற்றுமாசு பதிவாகியுள்ளது.

நொய்டா, காஜியாபாத், கூர்கான், ஃபரிதாபாத் பகுதிகளில் 400 முதல் 709 புள்ளிகள் வரை காற்றின் மாசு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 5ம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், பட்டாசுகளை வெடிக்கவும், கட்டிடப்பணிகளை மேற்கொள்ளவும், குப்பைகளை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே