JUST IN : தீவிர புயலாக மாறியது ‘மஹா’

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள மகா புயல் தற்போது தீவிர புயலாக மாறி இருக்கிறது.

அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலை கொண்டிருக்கும் நிலையில், புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதற்கு மஹா என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. தற்போது அந்த மகா புயல் தீவிர புயலாக மாறி உள்ளது. இது அடுத்து அதி தீவிர புயலாக மாறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

வரும் 4ம் தேதி வரை இதனையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

மகா புயலை ஒட்டி கடல் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கு இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றாலும், தெற்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது.

தமிழகம், புதுவையில் பரவலாக மிதமான மழை நீடிக்கும் என்றும், 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மஹா புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி லட்சத் தீவு அருகே நிலைகொண்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹா தீவிர புயல் காரணமாக, லட்சத்தீவுகளில் அதீத கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே