கொரோனா நூறு சதவிகிதம் ஒழியாது..; ஆண்டு முழுதும் நீடிக்கும் நோயாக மாறலாம் – மருத்துவ நிபுணர்கள் கணிப்பு..!!

கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும், வைரஸின் மரபணு மாற்றங்களால், எதிர்காலத்தில் அது ஆண்டு முழுதும் காணப்படும் ஒரு நோயாக மாறி விடும் என சில மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டெல்லி அரசு LNJP மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுரேஷ் குமார் இது பற்றி கூறுகையில், டெல்லியில் இருந்து ஒரு போதும் கொரோனா நூறு சதவிகிதம் ஒழியாது என்றும், ஆண்டு முழுதும் சில கொரோனா நோயாளிகள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கொரோனா mRNA அடிப்படையிலான வைரஸ் என்பதால் தொடர்ந்து வாழ்வதற்காக தனது வடிவத்தை அது தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் என்பதால் அது ஒரு நீங்காத நோயாக நீடிக்கலாம் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே