அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் போக்குவரத்துத்துறை அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் சென்னையிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, கரூரிலுள்ள அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் அதிகப்படியான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு புகார் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு பதிவை தொடர்ந்து சென்னை கல்லூரியில் 21 இடங்களில் , 21 டிஎஸ்பிக்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் 2 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் ரமேஷ், கார்த்தி, ஆதரவாளர் கே.சி.பரமசிவம் வீடு, அலுவலகத்திலும் ரெய்டு நடந்து வருகிறது.