சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தரப்படுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
திமுகவின் எம்எல்ஏவான ஜெ. அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார். அவரை தொடர்ந்து பல எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தரப்படுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி கூறி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறி உள்ளார். அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் கேஎஸ் அழகிரி கூறி உள்ளார்.

