நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியிருக்கிறது.

இதற்கு வானிலை ஆய்வு மையம் நிவர் புயல் என பெயர் சூட்டியுள்ளது.

புயல் நாளை மாலை மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்கும் போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் 2 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறும், மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிகமாக பாதிக்கப்படும் 13 மாவட்டங்களுக்கு சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு, புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

இந்த நிலையில், நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே