6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றில் ஏற்பட்டுள்ள திரை வேக மாநாடு காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்; மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 22ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே