சாத்தான்குளம் சம்பவம்.. சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்..!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்ட பதிவில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகதனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் கண் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும், விடக் கூடாது, சத்தியமா விடவேக் கூடாது எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே