கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் பலனை தருகிறது – Pfizer மருந்து நிறுவனம் தகவல்..!!

கொரோனா வைரசுக்கு எதிராக 3வது கட்ட தடுப்பூசி பரிசோதனையில் 90 சதவீதம் பேருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் இன்று அறிவித்துள்ளன.

அவசரகால பயன்பாட்டுக்காக இம்மாதம் முதலே இதை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

16 முதல் 85 வயதுக்கு உட்பட்டோர் இடம் இந்த தடுப்பூசியை செலுத்தி பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்த நிறுவன தலைவர் ஆல்பர்ட் கூறுகையில், அறிவியல் மற்றும் மனித குலத்துக்கு இது ஒரு நல்ல நாள்.

எங்களது தடுப்பூசி தயாரிப்பு பணியின் முக்கியமான கட்டத்திற்கு வந்து சேர்த்துள்ளோம். 

தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் தயாரித்த தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இதுவரை 6 நாடுகளில், 43 ஆயிரத்து 500 பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு பரிசோதனை செய்துள்ளோம்.

இந்த தடுப்பூசி காரணமாக பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

இந்த மருந்து எவ்வளவு காலத்துக்கு கொரோனாவை தடுக்க பயன்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே