#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூன் 28) 3,940 பேருக்கு கொரோனா ; 54 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,940 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 54 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 1,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே