#BREAKING : மேற்கு வங்கத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு – மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே