அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இருக்கக் கூடிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையை இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளிலும் தங்கள் வசதிக்கேற்ப சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அங்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு வரையறுத்துள்ளது.
மேலும் தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
அதற்கான கட்டணத்தை தமிழக அரசு செல்லும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்திலும் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது.
இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனமே செலுத்தும்.
ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.