டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை..!

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

டில்லியில், கொரோனா வைரஸ் தாக்குதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம், காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில், தனிமையில் இருந்து வருகிறார்.

ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்புள்ள அவருக்கு, இன்று காலை, கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை நடைபெற்றது.

அதன் முடிவுகள் இன்று வெளியாயின. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் சாதாரண காய்ச்சல் தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே