ஒரு மாணவிக்காக 73 பேர் செல்லும் ஒரு படகையே இயக்கும் கேரள அரசு! சென்று வர கட்டணம் 18 தான்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை பகுதியைச் சேர்ந்த மாணவர் சன்டிரா பாபு. இவருக்கு 17 வயது ஆகிறது அங்கு ஒரு தனியார் பள்ளி ஒன்றில் படித்து பிளஸ் ஒன் தேர்வினை எழுத இருந்தார்.

ஆனால் அந்த இடத்திற்கு செல்ல அரைமணி நேரம் ஆகும். ஆனால் படகில்தான் பயணிக்கவேண்டும். தனிப்படகிள் பயணித்தாலும் 4000 ரூபாய் செலவாகும். இந்நிலையில் கேரள அரசு தானாக முன்வந்து அந்த மாணவி பரீட்சை எழுத ஒரு தனி படகை இயக்கியுள்ளது.

அந்த படகில் 70 பேர் சென்று பயணிக்கலாம். ஆனால் தனி ஒருவருக்காக வெறும் 18 ரூபாய் கட்டணத்தில் இந்த படகை கேரள அரசு இயக்கி வருகிறது. காலை 11 30 மணிக்கு கிளம்பி 12 மணிக்கு அவரை பள்ளியில் இறக்கி விடும் . மேலும் அங்கேயே அந்த படகு காத்திருந்து மாலை 4 மணிக்கு அவரை அழைத்து வந்து வீட்டிற்கு சென்று விடும் வகையில் அந்த படகை கேரள அரசு அமர்த்தியுள்ளது.

Related Tags :

kerala| Alappuzha

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே