1+ வெறியர்களே!!! வரும் 4ஆம்தேதி விற்பனைக்கு வரவுள்ள ஒன் பிளஸ் 8! இதுதான் விபரம்!!

ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் தனது ஒன் பிளஸ் 8 மற்றும் ஒன் பிளஸ் 8 ப்ரோ மொபைல் போன்களை வெளியிட்டது. சொல்லப்போனால் இது தான் தற்போதைய மார்க்கெட்டில் இருக்கும் மிகச் சிறந்த அதிவேகமான மொபைல்போன் ஆகும்.

இது முதலில் மே 17ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது. 12 மணிக்கு விற்பனை துவங்கிய உடன் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அதன் பின்னர் மே 29ம் தேதி பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. இரண்டு நிமிடத்தில் இந்த விற்பனையும் தீர்ந்துவிட்டது.

இந்நிலையில் வரும் ஜூன் 4-ஆம் தேதி மீண்டும் இந்த விற்பனை அமேசான் வலைதளத்தில் பகல் 12 மணிக்கு விற்பனை துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் விலை:

ஒன்பிளஸ் 8 (6 ஜிபி + 128 ஜிபி) – ரூ.41,999
ஒன்பிளஸ் 8 (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.44,999
ஒன்பிளஸ் 8 (12 ஜிபி + 256 ஜிபி) – ரூ.49,999

ஒன்பிளஸ் 8 ப்ரோ (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.54,999
ஒன்பிளஸ் 8 ப்ரோ (12 ஜிபி + 256 ஜிபி) – ரூ.59,999 ஆகும்.



**ஆனால் ஒன் பிளஸ் 8 ப்ரோ விற்பனை பற்றி இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related Tags :

Oneplus8| Oneplus8Pro

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே