சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி.

திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது.

45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே