டாஸ்மாக்கில் இரவு 7 மணி வரை மது விற்பனை..!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் மாலை 5 மணி வரை இருந்த நிலையில், தற்போது இரவு 7 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.

கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை நடந்துவரும் நிலையில், இரவு 7 மணி வரை விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கிற்கு முன்னதாக காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானக் கடைகள் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே