சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்

அத்தியாவசியப் பணிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் மக்கள் நடமாட்டமும், சாலைகளில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழலில், மாநில அரசின் வழிகாட்டுதல்படி தொழில்நிறுவனங்கள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.

அலுவலக வாகனங்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்களை அழைத்துச் செல்கின்றன.

இதனால் அண்ணா சாலை, கிண்டி, ராஜிவ் காந்தி சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், அத்தியாவசியம் மற்றும் அவசரப் பணிகளுக்காக ஏற்கனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இன்று முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்கள் உடன் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்கும் இடங்கள் பேருந்துகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே