கோயம்பேட்டில் கூலித்தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் தொழிலாளிக்கு (42) கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த 54 வயது பூக்கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து நடமாடும் வாகனம் மூலம் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில், மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதனால், கோயம்பேடு சந்தையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் தொழிலாளிக்கு (42) கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

ஏற்கனவே நான்கு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் ஆறு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானால் அது மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே