ஏப்.20ஆம் தேதிக்கு பின் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்…!

கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரும் 20ஆம் தேதி முதல் சில விலக்குகள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன்படி திருத்தப்பட்ட புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதில் வரும் 20 ஆம் தேதி முதல் விவசாய பணிகள், கட்டிட வேலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு வர்த்தகத்திற்கும் விலக்கி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன்கள், டிவி, லேப்டாப் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் விநியோக வாகனங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று தெரிகிறது.

ஏற்கனவே உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே