வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் நிறுவனர் ராணா கபூரின் டெல்லி, மும்பை இல்லங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரை கைது செய்துள்ளனர்.

பல கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கு எஸ்.பி.ஐ. வங்கி திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் வரை இம்மாதத்தில் வாடிக்கையாளர்கள் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

யெஸ் வங்கி மட்டுமின்றி இதர ஏடிஎம்களிலும் பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே