AGS நிறுவனத்தில் ஐடி ரெய்டு : விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை..

நடிகர் விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள ஏஜிஎஸ் குழும உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரி புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருட்டு பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ஏஜிஎஸ் குழுமம், அண்மையில் விஜயின் பிகில் திரைபடத்தையும் தயாரித்து விநியோகித்திருந்தது.

இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து, அக்குழுமம் தொடர்புடைய திரையரங்குகள் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி புலனாய்வுத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு இடங்களிலும் வருமானவரி புலனாய்வு துறையினர் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே